பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் இரவிலும் ஆய்வு பணிகளைப் பார்வை
தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு குடிநீருக்காக பொதுமக்கள் போராடியது கோடை காலத்தில் குடிநீர் என்பது 100 சதவீதம் இல்லாமல் பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டம் நடத்தி வந்தனர்.
மாநகராட்சி மேயராக ஜெகன் பதவி ஏற்ற 2022 ஆம் ஆண்டுக்குப் பின்பு படிப்படியாக தூத்துக்குடி மாநகரில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது பழைய பைப் லைன் மாற்றப்பட்டு புதிய பைப் லைன் மூலம் தற்போது குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது ஒரு சில வார்டுகளில் தொடர்ந்து குடிநீர் சரிவர வரவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது
இதனை அடுத்து 60 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் அதன் அடிப்படையில் மாநகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டு 39 வது வார்டு சீரான குடிநீர் வரவில்லை என்று பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு வாட்ஸ் அப்பில் புகார் தெரிவித்தனர்
அதன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பைப்லைன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை இரவு டபிள்யூஜி ரோட்டில் சிவன் கோவில் திரும்பும் கார்னரில் பைப் லைன் பதிக்கப்பட்டு குடிநீர் சீராக வருகிறதா என்று மேயர் ஜெகன் ஆய்வு செய்தார் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார் இந்தப் பணிகள் முடிவடையும் போது 29 ஆவது வார்டு மற்றும் 39வது வார்டு பகுதிகளில் சீரான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று மேயர் ஜெகன் தெரிவித்தார்
தற்போது அறுபது வார்டுகளில் ஒரு சில வார்டுகளை தவிர மற்ற வாடுகளில் எல்லாம் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது அதுவும் கோடை காலத்தில் எந்த விதமான தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகனின் மாபெரும் கனவுத் திட்டம் ஒன்று மாநகர மக்களுக்கு அறிவிக்க உள்ளார் இந்த கனவு திட்டம் மாநகராட்சி மேயர் ஜெகன் அறிவிக்கும் போது தூத்துக்குடி மாநகர் மக்கள் எவ்வளவு சந்தோசம் எவ்வளவு உற்சாகம் இருப்பார்கள் என்பது மேயர் ஜெகனின் கனவுத் திட்டம் அறிவிக்கும் போது அது நடைமுறையில் அமுல்படுத்தி தெரிவிக்கும் போது உற்சாகமடைவார்கள்.
இந்த ஆய்வின்போது திமுக பகுதி செயலாளர் சுகாதாரக் குழு தலைவருமான சுரேஷ்குமார். முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதி பிரபாகர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் திமுகவினர் உடன் இருந்தனர்