ராணிப்பேட்டை ஜூன் 29
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட் டது நெடும்புலி ஊராட்சியில் நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளது அதில் கால்வாய் ஆழ்ந்த உள்ளதால். இந்த நிலையில் பருவ மழை தொடங்க இருக்கும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வரத்து கால்வாய் தூர்வார வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்த நிலையில் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் மாறன் தனது சொந்த நிதியில் கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்
.இந்த பணிகளை நேற்று ஊராட்சிமன்ற தலைவர் மாறன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கால்வாயில் பிளாஸ்டிக், குப்பை களை கொட்டக்கூடாது என பொது மக்களுக்கு அறிவுறுத்தி னார். அப்போது ஊராட்சி செயலர் பார்த்திபன், ஊராட்சி ஊழியர்கள் உடனிருந்தனர்.