கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம்,அரசினர் மகளிர் கல்லூரி லியோ சங்கம் , தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய லதா ஜுவல்லரி சார்பாகஅமரேசன், ஸ்வர்ணலதா அமரேசன் ஆகியோரின் நினைவாக,லக்ஷ்மி ஜுவல்லரி, லக்ஷ்மி தங்கமாளிகை,ஹோட்டல் ராயல் மயூரா உரிமையாளர்கள் மகேஷ் ராஜேஷ் ஆகியோரின் தந்தையார் பாஸ்கரன் முப்பதாவது ஆண்டு நினைவாக, ஆனந்த் லட்சுமி நினைவாக,பிச்சை,நாக வெங்கட ரத்தினம்,நீங்கள் ஜுவல்ஸ் குடும்பத்தினர்ஆகியோரின் குடும்பத்தினர்நிதி உதவியுடன் கண் சிகிச்சை முகாம் சரஸ்வதி பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

முகாமை சங்கத் தலைவர் லயன் கே எஸ் பாலசுப்ரமணியன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

வட்டார தலைவர் லயன் ..பாலகிருஷ்ணன்,செயலாளர் லயன் ராஜாராமன்,பொருளாளர் லயன். ஜோதிராம், திட்ட செயலாளர் லயன்.சங்கர் மற்றும் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள்.

அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்று பொது மக்களின் கண்களை பரிசோதித்தனா். நகரப்புற ,கிராமப்புற பொது மக்கள் என 446 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 213 கண்புரை நோயாளிகள் கண்டறிய பட்டு 104 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரை அழைத்து செல்லப்பட்டனர்.
அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து பேருந்து கட்டணம் உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.மீதமுள்ள 109 நபர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு புதன் கிழமை காலை மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்

இரண்டு கண்களும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 33 நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டதுமுகாம் ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்

முகாம் ஏற்பாடுகளை சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *