மதுரையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்ற கும்பல் துப்பாக்கி – அரிவாள்கள் பறிமுதல்!!
மதுரையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர் களை குறிவைத்து போதை மருந்து மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு வந்த தகவலை தொடர்ந்து மதுரை மாவட்ட எஸ். பி. உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
செக்கானூரணி பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் போதை மாத்திரை சப்ளை செய்வ தாகவும் அவரிடம் வாங்கி விற்பதாகபிடிபட்ட நபர் தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த நபர் மூலமா கசெக்கானூரணியை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்த போதை மாத்திரை விற்பனை கும்பல் பிடிபட்ட நபர் உட்பட 6 பேரை பிடித்து செக்கானூரணி போலீசாரிடம் தனிப் படை போலீசார் ஒப்படைத்தனர்..
இதை தொடர்ந்து உசிலம்பட்டி காவல் சரக டி.எஸ்.பி. இளவரசன் (பொ) செக்கானூரணி காவல் நிலைய ஆய் வாளர் திலகராணி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து 680 நைட்ராசெபம் மற்றும் டாபென்டால் மாத்திரைகள், ஒரு கார், ஒரு டூ வீலர் , ஒரு ஏர் பிஸ்டல், 11 அரிவாள்கள், 6 செல்போன்கள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தள்ளனர். பிடிபட்ட நபர்களுக்கு போதை மாத்திரை கும்பல் வேறு யாருட னும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.