தேனி ஊராட்சி ஒன்றியம் சீலையம் பட்டி ஊராட்சியில் மாபெரும் தூய்மை பணிகள் தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீலையம்பட்டி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தேனி ஊராட்சி ஒன்றியம் சீலையம்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற ஒட்டு மொத்த மாபெரும் தூய்மைப் பணிகளை(Mass Cleaning) கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) .ரஜத் பீடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் ரவிச்சந்திரன் ஊராட்சி செயலாளர் கே பாண்டி ஆகியோர் உடன் இருந்தனர்