கும்பகோணம் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கத்தின் 2026-2027 ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஏ. ஆர். ஆர். லைலா சுப்ரமணியம் திருமண மஹாலில் நடந்தது.
விழாவுக்கு சங்கத் தலைவர் பூரண்குமார் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முன்னாள் ஆளுநர் கே. பிரேம் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிராமணம் செய்து சிறுபுரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் ராமதுரை புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.தொடர்ந்துமாவட்டத் தலைவர் செந்தில்குமரன்,கூடுதல் மாவட்ட அவை செயலாளர் சங்கரலட்சுமி காளிதாஸ் ,மண்டலத் தலைவர் ரமேஷ் குமார்,முதன்மைக் கொடையாளர் கோபால்சாமி,வட்டாரத் தலைவர் அன்புச்செல்வி ,மண்டல செயலாளர் சீனிவாசன்,மண்டல பொருளாளர் வில்வானந்தம் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
புதிய தலைவர் கணேஷ்குமார், செயலர் ராஜு , பொருளாளர் சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.குமுதவல்லி பிரேம் வாழ்த்துரை வழங்கி சேவை திட்டங்களான கல்லூரி மாணவ,மாணவிகளின் கல்விக் கட்டணமாக ஐந்து நபர்களுக்கு 60 ஆயிரமும், தில்லையம்பூர் முதியோர் இல்லத்திற்கு ஐந்து மூட்டை அரிசி வழங்கப்பட்டது.விழாவில் அனைத்து லயன் சங்க , நிர்வாகிகள்,, உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேஜர் பழனிவேல் செய்திருந்தார்