கோவையில் வரும் ஆகஸ்ட் 7,8, மற்றும் 9 ஆகிய தேதிகளில் கொடிசியா அரங்கில் பயாண்ட் மீடியாவின் (INTERIO & EXTERIO EXPO 2026) இன்டீரியோ மற்றும் எக்ஸ்டீரியோ கண்காட்சி நடைபெற உள்ளது..
இந்நிலையில் இது தொடர்பான பிராண்ட் அம்பாசிடர் அறிமுக விழா அவினாசி சாலை கிராண்ட் ரீஜெண்ட் அரங்கில் நடைபெற்றது..
முன்னதாக, பயாண்ட் மீடியா நிறுவனத்தின் தலைவர் சுந்தரமூர்த்தி கிருஷ்ணன் மற்றும் நிர்வாக இயக்குனர் ஹேமா சுந்தரமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,கட்டுமானம், உள்துறை மற்றும் வெளித்துறை வடிவமைப்புத் துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள், நவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் அறிமுகப்படுத்தும் நோக்கில் INTERIO & EXTERIO EXPO 2026 கண்காட்சி ஆகஸ்ட் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி மையத்தின் பி.மற்றும் சி ஆகிய அரங்குகளில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்..
17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சி, தற்போது தனது 13-வது பதிப்பை எட்டியுள்ளதாகவும்
கண்காட்சியுடன் இணைந்து (CI-CON MAT 2026) கட்டுமான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் கட்டுமானம், இன்டீரியர், எக்ஸ்டீரியர், சிவில் இன்ஜினியரிங், கட்டிட வடிவமைப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்..
இந்த ஆண்டுக்கான கண்காட்சியில் நாடு முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மேலும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கூறிய அவர், தொழில்துறையினர், கட்டிடக் கலைஞர்கள், இன்டீரியர் டிசைனர்கள், பில்டர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் இந்த கண்காட்சி அமையும் என நம்பிக்கை தெரிவித்தனர்..
இதனைத் தொடர்ந்து, கண்காட்சிக்கான பிராண்ட் அம்பாசிடர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது..
இந்த நிகழ்வில் கண்காட்சியின் சிறப்பம்சங்கள், நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.