தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஜூன்-28. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்கும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தஞ்சை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில்தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மகேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜெய்பிரகாஷ், வழக்கறிஞர் முருகேசன், செல்வ சுப்ரமணியன், பெரியார் செல்வம், சாந்தா ராமதாஸ் மற்றும் ஏராளமான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளரிடம் பேசிய மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜெயபிரகாஷ் மத்திய அரசு செய்த நீட் தேர்வு முறைகேடு சி.பி.எஸ்.இ ஆன்லைன் முறைக்கேடு, க்யூட் தேர்வு முறைகேடு, ராமஜென்ம பூமி கோயில் உண்டியலில் பெரிய பொருளாதார முறைகேடு பணத்தை வசூல் செய்து வங்கியில் கட்டியதில் முறைகேடு செய்துள்ளனர் என விஷ்வ ஹிந்து உலகத் தலைவர் இது குறித்து பேசி உள்ளார். மத்திய பிரதேச முதல்வர் பெரிய நில மோசடி செய்திருக்கிறார் உஜ்ஜயினி நான்கு வழி சாலையில் 168 ஏக்கர் நில மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் டெட் தேர்வில் வாரியத்தில் பெரிய ஊழல் நடந்துள்ளது. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு தொடர்பு உள்ளது பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் இரண்டு மாநிலம் பீகார், மத்திய பிரதேசத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதியை குறைத்துள்ளது. மத்திய அரசு இவைகளை சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் ராஜினாமா செய்ய வேண்டும். 22 லட்சம் மாணவர்களை மறுத்தேர்வு எழுத செய்து தொடர்ந்து ஊழலில் ஈடுபட்டு வருகிறது இதற்கு பிரதமர் வாய் திறக்கவில்லை இந்த அரசு மக்களுக்கு தேவையா என தெரிவித்தார்