பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு வலியுறுத்தி, சைக்கிள் பயணம் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி உலக சாதனை புரிந்தமைக்காக, சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராமுக்கு உயரிய அங்கிகாரம் வழங்கி கெளரவிப்பு !!
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணத்தில் உலக சாதனை படைத்த கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் சைக்கிளிஸ்டுமான ஜி.டி. விஷ்ணு ராம் அவர்களுக்கு, பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்சில் நடைபெற்ற சர்வதேச விழாவில், இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக, சைக்கிளிஸ்டும் சமூக ஆர்வலருமான ஜி.டி. விஷ்ணுராம் சமீபத்தில் தனுஷ்கோடி முதல் கோவை வரை, 500 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 15 மணி நேரம் 8 நிமிடங்களில் மிக வேகமாக கடந்தார். இந்த வேகமான சைக்கிள் பயணம் உலக சாதனையாக அங்கிகரிக்கப்பட்டிருந்தது .
இந்த நிலையிலே, ஜி.டி.விஷ்ணு ராம் படைத்த உலக சாதனைக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
உலகளவில் 10-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சாதனையாளர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச விருது வழங்கும் நிகழ்வில், தென்னிந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டு விருது பெற்ற ஒரே நபர் ஜி.டி. விஷ்ணு ராம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தினத்தை முன்னிட்டு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது,
போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற அவரது விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கின்றனர். இந்த சர்வதேச அங்கீகாரம் இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக கோயம்புத்தூர் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் சைக்கிளிஸ்டு ஜி.டி. விஷ்ணு ராம் கூறுகையில்… ”இந்த அங்கீகாரமானது சமூக விழிப்புணர்பு பயணத்திற்கு ஒரு புதிய தொடக்கம்.
சைக்கிளிங் வாயிலாக சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இளைஞர்களை ஆரோக்கியமான, ஒழுக்கமான வாழ்க்கை முறைக்கு ஊக்குவிக்கவும் தொடர்ந்து செயல்படுவேன். 2026-ல் ஆண்டில் 2026 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் செய்து, போதைப்பொருள் இல்லா தமிழகம் மற்றும் பெண்கள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை வீரியத்துடன் எடுத்துச்செல்ல திட்டமிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் பொருள் ஒழிப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு உறுதுணையாக எங்களது பயணம் அமையும் ” என சைக்கிளிஸ்டு ஜி. டி. விஷ்ணு ராம் தெரிவித்தார்.