காந்தி உலக அறக்கட்டளையால் சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் 19-21 ஜூன் 2026 நடைபெற்ற”பொழுதுபோக்குத் திருவிழா” என்ற வரலாற்று நிகழ்வில்,
“100-க்கும் மேற்பட்ட சேகரிப்புக் கலைஞர்களின் 1 லட்சம் தனித்துவமான சேகரிப்புகளை, ஒரு சேகரிப்புக் கலைஞராக பொது அறிவைத் தரும் சேகரிப்பு பொருட்களைக் காட்சிப்படுத்தி சாதனை படைத்ததற்காக வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தக முதன்மை ஆசிரியர் டாக்டர் மாலதி பதுமலாய் கையொப்பம் இட்ட சான்றிதழ்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்பு கலைஞர்கள் தீப்பெட்டி அட்டைகளை காட்சிப்படுத்திய விஜயகுமார், உலகபணத்தாள்களை காட்சிப்படுத்திய இளம்வழுதி, சுடுமன் பொருட்களை காட்சிப்படுத்திய சந்திரசேகரன் புதைஉயிரி படிமங்களை காட்சிப்படுத்திய ராஜ்குமார் உட்பட பலர் சான்றிதழ் பெற்றனர். வேர்ல்டு புக் ஆஃப் அச்சீவர்ஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்களை அனைவரும் பாராட்டினர்.