செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மாரிபுத்தூர் பகுதியில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாள் விழா 50 லட்சம் மதிப்பீட்டில் நல திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

இந்நிகழ்ச்சியினை அருங்குணம் ஊராட்சி மன்றத் தலைவர் யோகேஷ் பாபு. ஜமீன் எண்டத்தூர் தலைவர் பூபாலன் தலைமையில் கொண்டாடப்பட்டதுஇதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வெளிநாடு வாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் தென்னரசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் அவர் பேசியது எங்களைப் பார்த்து மக்கள் வாக்கு செலுத்தவில்லை எங்கள் தளபதி முகத்தை பார்த்து வாக்கு செலுத்தினர் இங்கு முதலமைச்சரையே தோற்கடித்தது எங்க தளபதி முகம் ஒவ்வொரு கிராமத்திலும் தளபதியின் சிங்கப்பெண்கள் கூட்டம் உள்ளது இது மக்களுக்கான ஆட்சி உங்களுக்கான ஆட்சி என பேசினார்

மேலும் இப்போது நடைபெறுகின்ற ஆட்சி மக்களாட்சி எனவும் மன்னர் ஆட்சி அல்ல என்றும் கூறினார், மேலும் அவர் பேசுகையில் ஏழை எளியவனான எனக்கு அரசு வழங்கிய இரண்டு சென்ட் ஓட்டு வீட்டில் தான் தான் நான் வசித்து வருகிறேன் என்னையும் அமைச்சர் மாவட்டத் தலைவர் என உருவாக்கினார் என பெருமிதமாக பேசினார்

இந்த நிகழ்ச்சியில் பேச்சாளர் லயோலா மணி மாவட்ட தலைவர் எம் எஸ் பாலாஜி. முன்னாள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *