அரூர்: தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் மறைவுக்கு அரூர் பிரஸ் கிளப்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.


சுதந்திரப் போராட்டத் தியாகி பி.எஸ். தனுஷ்கோடியின் மகனான இவர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலமானார்.அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதாக பிரஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *