உர விநியோகம் தொடர்பான கூட்ஸ் ரயில் வேகன் ஒதுக்கீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு
இந்தியாவில் மத்திய அரசின் மானிய விலையில் யூரியா மற்றும் mop டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களை உற்பத்தி ஆலைகளில் இருந்து விநியோக மையங்களுக்குக் கொண்டு செல்ல ரயில்வே வேகன்கள் (Rakes/Wagons) பயன்படுத்தப்பட்டு வருகின்றன..
இந்நிலையில் தென்னக ரயில்வே கூட்ஸெட்டில் இந்த வேகன்கள் ஒதுக்கீட்டில், கோவையில் செயல்படும் வடகோவை கூட்ஸெட்டில் பல்வேறு இடையூறுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நலையில் இது தொடர்பாக,
உர நிறுவனங்களின் clearing காண்ட்ராக்டுகளை பெற்ற சக்தி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் பாண்டியன் , உர விற்பனை மற்றும் வடகோவை கூட்ஸெட் வேகன் ஒதுக்கீட்டில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் இடையூறுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்..
இது தொடர்பாக அவர் அளித்துள்ள மனுவில் IPL,MFL SPIC GSFC உள்ளிட்ட உர நிறுவனங்களின் வேகன்கள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருப்பதாக தெரிவித்தார்..
இந்நிலையில் வடகோவை இரயில் நிலையத்தில், வேகன் ஒதுக்கீடு, சரக்கு விநியோகம் மற்றும் டெண்டர் எடுத்த வர்களை தடுத்து நிறுத்திய நிலையில்,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரிடையே நடத்திய பேச்சு வார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டு,சக்தி இண்டஸ்ட்ரியல் நிறுவனத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது…