தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை போக்சோ சட்டம், பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.

குண்டடம்

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் ஒரு பகுதியாக குண்டடம் மற்றும் சேடபாளையம் அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகளுக்கு போக்சோ (POCSO) சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், பெண்களின் பாதுகாப்பு, இணையவழி பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் காவல்துறையை அணுகும் நடைமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் பாதம்பிரியா, பெண் காவலர் செளந்தர்யா . காவலர் சுரேஷ் கிருஷ்ணா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *