துறையூர் ஜூன் -29
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பகளவாடி நவாமரம் விளையாட்டு மைதானத்தில் 27/06/2026 அன்று துறையூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் மாநில அளவிலான வழக்கறிஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் சங்க பொருளாளர் சசிகுமார் வரவேற்புரை நிகழ்த்த, சங்க செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்தார்.


இதில் துறையூர்,முசிறி, தொட்டியம், ஸ்ரீவில்லிபுத்தூர்,சின்ன சேலம், கீரனூர், கள்ளக்குறிச்சி, செங்கம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வழக்கறிஞர்கள் சங்க அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.இப்போட்டி காலை 7மணி முதல் இரவு 7மணி வரை நடைபெற்றது. போட்டியில் கள்ளக்குறிச்சி அணி முதலிடமும்,திருச்சி நீதிமன்ற ஊழியர்கள் அணி இரண்டாம் இடமும், உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள் அணி மூன்றாம் இடமும் பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை, பதக்கம் , பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக அரசு வழக்கறிஞர் சந்திரமோகன், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள் சபாபதி, ஜெயராஜ்,முன்னாள் சங்க தலைவர்கள் உத்திராபதி, கார்த்திகேயன்,
ஏ எஸ் மனோகர், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் செந்தில்குமார்,சுரேஷ்குமார், ராமசாமி,முன்னாள் சங்க துணை தலைவர் விவேக் ராஜா, முன்னாள் சங்க செயலாளர் முகம்மது நபிக், வழக்கறிஞர்கள் அத்தியப்பன், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நடுவர்களாக ராஜபாண்டி, ரஞ்சித், வெங்கடேஷ்வரன் ஆகியோர் போட்டியில் வென்ற அணியினரை தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியின் நிறைவில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அன்பு பிரபாகரன் நன்றியுரை ஆற்றினார்.வழக்கறிஞர்கள் பழனியாண்டி, கருணாகரன், பாபு ,மோகன்ராஜ்,சரண்ராஜ் ஆகியோர் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *