முதுகுளத்தூர் நிருபர்ஆர் செந்தில்குமார்
முதுகுளத்தூர் கமுதி வட்டங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கல்
கமுதி, ஜூன் 28
ராமநாதபுரம் மாவட்டத்தின் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமில் மொத்தம் 24,072 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கமுதி வட்டத்தில் வட்டார தலைமை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரோகினி தலைமையில், 135 மையங்களில் 5 வயதிற்குட்பட்ட 7,743 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலராமநதி மருத்துவ அலுவலர் டாக்டர் சாரு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதி ஷ்குமார் உள்ளிட்ட சுகாதாரப் கலந்து பணியாளர்கள் கொண்டனர்.
முதுகுளத்தூர் வட்டத்தில் 100 மையங்களில் 6,284 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதுமுதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமை வட்டாட்சியர் கோகுல்நாத் தொடங்கி வைத்தார்.வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
கடலாடி வட்டத்தில் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் மு. ராமச்சந்திரன் தலைமையில் 198 மையங்களில்நம்பிக்கை என்பது வீடும் பூவாக10,045 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. கடலாடி, சாயல்குடி, சிக்கல், வாலிநோக்கம், மேலக்கிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கட்டடங்களில் முகாம்கள் நடைபெற்றன.