பெரம்பலூர்.ஜீன்.29. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்புகளுக்கு கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. யுமான திருமாவளவன் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளராக அத்தியூரை சேர்ந்த மணிமாறன் என்பவரை கட்சியில் மாவட்டச் செயலாளர் அன்பானந்தன் பரிந்துரையின் பேரில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவர் ஏற்கனவே கட்சியில் மாவட்டத் துணை அமைப்பாளர் மற்றும் தமிழ் தேசிய பேரவை மாவட்ட துணைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து இருக்கிறார். (கட்சி சார்பில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்).

இதேபோல் ஒன்றிய பொருளாளராக வ. கீரனூர் சிவாவும், ஒன்றிய துணைச் செயலாளராக பி.கே. நல்லூர் சூர்யா, கீழப்பெரம்பலூர் கருப்பையா, ஓலைப்பாடி செல்வராசு, நன்னை பரமேஸ்வரி, ப.க. நல்லூர் காமாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதே போல் வேப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பென்னக்கோணம் சுதாகரும், ஒன்றிய துணைச் செயலாளர்களாக செல்வேந்திரன், திருமாந்துறை தமிழ்ச்செல்வன், கழனிவாசல் ராம்குமார், ம.சாந்தி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *