தாராபுரம் செய்திகளார் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகை பறிப்பு.!

குண்டடம், ஜூன்.

குண்டடம் அருகே மாம்பழம் விற்ற பெண்ணைத் தாக்கி நகையை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர் தாராபுரம் சோழக்கடை வீதியைச் சேர்ந்தவர் காதர்மொய்தீன், இவரது மனைவி மும்தாஜ்(48). இவர் தாராபுரம் காங்கயம் ரோட்டில் குண்டடம் போலீஸ் சரகப்பகுதியான குள்ளாய்பாளையம் அருகே ரோட்டோரம் மாம்பழக்கடை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல நேற்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவன் பழம் கேட்பது போல கேட்டு திடீரென அருகில் கிடந்த கல்லை எடுத்து மும்தாஜின் தலையில் பலமாக தாக்கிவிட்டு அவர் காதில் அணிந்திருந்த சுமார் 1.5பவுன் கம்மலை பறித்துச் சென்றுவிட்டான்.
காயமடைந்த மும்தாஜ் தாராபுரம் அரசு ஆஸ்பத்தியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி குண்டடம் போலீசார் விசரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *