கம்பம் கம்பம் மெட்டு மலைச்சாலையில் சாலை மேம்பாட்டு பணிகள் தீவிரம் தேனி மாவட்டம் கேரளா மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைச்சாலையாக கம்பம் மெட்டு மலைச்சாலை உள்ளது கம்பம் நகரில் இருந்து கம்பம் மெட்டு மலை சாலை 18 கொண்டை ஊசி வளைவுகள் மூலம் 13 கிமீ தூரத்தில் கேரளா மாநிலத்தை இணைக்கும் கம்பம் மெட்டு மலைச்சாலையில் மலைப்பகுதி என்பதால் அடிக்கடி சேதம் அடைவதும் அதனை மாநில நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பு பணியில் ஈடுபடுவார்கள் இதன் படி உத்தம பாளையம் நெடுஞ்சாலைத்துறையினர் மலைச்சாலையில் உள்ள தண்ணீர் ஊற்று என்ற பகுதியில் சிமெண்டு சாலை இருபுறமும் வடிகால் அமைக்க பணி கடந்த ஜீன் 8 ஆம் தேதி காலையில் தொடங்கும் பணி இரவு 10 மணி வரை ஜெனரேட்டர் மூலம் மின்விளக்கு அமைத்து மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன

இந்தச் சாலை பணிகளால் கம்பம் மெட்டு ஒளியாக கேரளா செல்லும் வாகனங்கள் குமுளி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன கம்பம் மெட்டு வண்டன் மேடு தூக்குப் பாலம் புளியன்மலை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சாலை பணி நடைபெறும் இடம் வரை ஜீப்பில் செல்கின்றனர் அதன் பின் சாலை நடைபெறும் இடத்தை கடந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் நடந்து சென்று கேரளாவை சென்றடைந்து அங்கிருந்து ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வருகின்றன.

பல ஆயிரம் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு சென்று பொதுமக்கள் தங்களது வாழ்வாதாரத்தை கழித்து வரும் முக்கிய சாலை என்பதால் இரவு பகலாக தொடர்ந்து பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

இந்த பணிகளை உத்தமபாளையம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் குமணன் உதவி கோட்ட பொறியாளர் வெங்கடேசன் உதவி பொறியாளர் வைரகுமார் கம்பம் மெட்டில் பணிகளை விரைந்து முடித்து சாலையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன இந்த பணிகளை மொத்தம் 4.50 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் அரசு முதல் நிலை ஒப்பந்ததாரர் ஏ. பி. அப்துல் சமது தலைமையிலான பணியாளர்கள் சாலை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *