இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் – TNDPL சீசன் 1 கோவையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
கோயம்புத்தூரில் உள்ள ST Sportz Indoor Court-ல் இந்தியாவின் முதல் மற்றும் மிகப்பெரிய டைனஸ்டி லீக் தொடராகக் கருதப்படும் TNDPL (Tamil Nadu Pickleball Dynasty League) சீசன் 1 மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
100 வீரர்கள், 10 அணித் தலைவர்கள் மற்றும் 10 அணியின் உரிமையாளர்கள் கலந்து கொண்ட இந்த தொடக்க விழா விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.இந்த தொடரின் தலைப்பு ஆதரவாளராக இந்திய கார் பந்தய சாம்பியனும், VNA Groups மற்றும் DIA Diamonds நிறுவனங்களின் உரிமையாளருமான திரு. பாலபிரசாத் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார். விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக அவர் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும் பங்களிப்பும் பாராட்டப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட இயக்குநர் என். கிருஷ்ணா (ஜில்லுனு ஒரு காதல், பத்து தல), உலகின் நம்பர் 1 Virtual Reality டென்னிஸ் வீரர் விமல்ராஜ் ஜெயச்சந்திரன், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அதவா ஈஸ்வரா, சர்வதேச பயிற்சியாளர் ராக்கி ராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இரண்டு நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் போட்டியில் வீரர்கள் உற்சாகமாக பங்கேற்று போட்டிகளை சிறப்பாக நிறைவு செய்தனர்.
இறுதிப்போட்டியில் கவுதம் தலைமையிலான மற்றும் கிஷோர், திவ்யா, சர்வேஷ் ஆகியோர் உரிமையில் இருந்த செம்மொழி எம்பயர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
ரன்னர்-அப் பட்டத்தை சேலம் ராமகிருஷ்ணன் ரங்கராஜ் உரிமையிலான பல்லவா டைட்டன்ஸ் அணி, கேப்டன் சந்தீப் தலைமையில் கைப்பற்றியது.இந்திய Pickleball வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்ற இந்த TNDPL தொடர், அடுத்த சீசனில் இன்னும் பிரம்மாண்டமாக திரும்பும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் சாம்பியன் பட்டம் வென்றது – செம்மொழி எம்பையர்ஸ்!
திவ்யா, கிஷோர், சர்வேஷ் ஆகியோரின் உரிமையில், கேப்டன் கவுதம் தலைமையிலான செம்மொழி எம்பையர்ஸ் அணி வெற்றிக்கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது. ரன்னர்-அப் – சேலம் ஆர்.ஆர் எலக்ட்ரிக்கல்ஸ் பல்லவா டைட்டன்ஸ்
ராமகிருஷ்ணன், ரங்கராஜ் உரிமையில், கேப்டன் சந்தீப் தலைமையிலான சேலம் ஆர்.ஆர் எலக்ட்ரிக்கல்ஸ் பல்லவா டைட்டன்ஸ் அணி ரன்னர்-அப் பட்டத்தை பெற்றது.