சேலம், கன்னங்குறிச்சியில், இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை இந்திய ஜனாதிபதியிடம் பெற்று சேலத்திற்கு பெருமை சேர்த்த திருவாளர் ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டர் அவர்களுக்கு, சேலம் வேர்ல்ட் ஷோட்டோகான் கராத்தே – அக்கிடோ சங்கம் சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப்பான பாராட்டு மற்றும் வாழ்த்து விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில், ஜப்பானிய பாரம்பரிய முறையின்படி மாஸ்டர் ரவிக்குமார் அவர்களின் தலைமையில் கராத்தே மாணவ, மாணவியர்கள் மரியாதையுடன் வணக்கம் செலுத்தி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள், மாஸ்டர் ரவிக்குமார், சமூக ஆர்வலர்கள் பாலகிருஷ்ணன், பிரஸ் சீனிவாசன், இளையராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற ராஜா ஸ்தபதி காளியப்ப கவுண்டர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *