குறிஞ்சிப்பாடி, ஜூலை.1-
கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ் வடலூர் விருத்தாசலம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு 7.30மணி அளவில் பயணிகளை இறக்கி விட பஸ் நின்றது,பயணிகளை இறக்கி விட்ட பின் தொடர்ந்து எடுத்த போது பேருந்து
பழுதாகி அங்கேயே நின்றது


,வாகனத்தினை, ஸ்டார்ட் செய்யும் முயற்சியில், கடைசி யாக இரவு 9 மணி அளவில்
டிரைவர்பேட்டரி தட்டியதாகவும் இதில் தீப்பொறி ஏற்பட்டு, டீசல் குழாயில் பட்டு தீ பற்றியது இந்த தீ பரவி பஸ் முழுவதும் கொழுந்து விட்டுஎரியத்தொடங்கியது இதில் அந்த சமயம்பயணம் செய்த பயணிகள் யாரும் பஸ்சில்இல்லை, அப்பொழுது பஸ் அருகில் நின்ற பொது மக்கள் அலறிஅடித்து சத்தம் போட்டுக்கொண்டு ஓடினார்கள், பஸ் டிரைவர் கண்டக்டரும் அங்கிருந்து தப்பி ஓடி போனார்கள்,இந்த தீ விபத்து காரணமாக பஸ் நிறுத்தம் அருகே இருந்த முட்டாய் கடை மற்றும் பட்டாணி கடைகள் மளிகை கடைகள் ஆகிய 6 கடையும், 10 மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள், ஜெனரேட்டர் ஆகியவை தீயில் எறிந்தது சேதமானது,தீ விபத்து தொடங்கியதும் வடலூர்பெரிய தீயாகக் கொழுந்து விட்டு எரிந்து, இதனால் வடலூர் நான்கு ரோடுமுழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது,இதனால் விருத்தாசலம் சேலம் திருச்சி செல்லும் போக்குவரத்து பாதித்தது உடனடியாக மாற்று வழிகள் பேருந்துகளை திருப்பி விடப்பட்டது


தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி நெய்வேலி பகுதி தீ தடுப்பு துறை துறையினர் விரைந்து வந்து தீமேலும் பரவாமல் தீ தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனர், இந்த தீவிபத்தில் ஸ்விட் ஸ்டால் உரிமையாளர் கர்ணன் மகன் வெங்கடேசன், பழக்கடை உரிமையாளர் சாரங்கபாணி மகன் வெங்கடேசன்ஹாய் குட் காயம் அடைந்தனர்

வடலூர்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்,தொடர்ந்து நெய்வேலி விருத்தாசலம் சாலையில் பஸ் நடு ரோட்டில் எரிந்து நின்றதால் போக்குவரத்து பாதித்ததா திருச்சி விருத்தாசலம் சேலம் பஸ் வழியாக கருங்குழி மேட்டுக்குப்பம் வழியாக மாற்று வழிகள் பஸ்கள் திருப்பி விடப்பட்டது ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *