சென்னை, எண்ணூர்:
எண்ணூர் உதவி ஆணையர் வெங்கடகுமார் தலைமையில், தனிப்படை போலீசார் ராஜேஷ்குமார், கேசவன், ரஞ்சித், அன்பு உள்ளிட்ட குழுவினர் நேற்று மதியம் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் உள்ள 105-வது பிளாக்கில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (30), கார்த்திக் (30), மற்றும் திருவொற்றியூர் கன்னிக் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கீதா (30) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், அவர்களிடமிருந்து சுமார் 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சங்கீதாவின் கணவர் உள்ளிட்ட மேலும் மூன்று பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.