கோவையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தினம் 2026 உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மருத்துவர்கள் தினக் கருப்பொருளான “Behind the Mask: Who Heals the Healers?” (முகக்கவசத்தின் பின்னால்: குணப்படுத்துபவர்களை குணப்படுத்துவது யார்?) என்பதையொட்டி, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு, மனநலம் மற்றும் நலனைப் போற்றும் வகையில் விழா நடைபெற்றது.

மருத்துவமனையின் பொது மேலாளர் ரெஜித் ராஜன் ஒருங்கிணைப்பில்நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர்கோவிந்தராஜன்,மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டனர் விழாவின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்களுக்கு மருத்துவர்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களின் தன்னலமற்ற சேவைக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

நோயாளிகளின் நலனுக்காக இரவு பகலின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களின் சேவையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு அறுசுவை உணவுடன் மகிழ்ச்சிகரமான சூழலில் நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *