திருவண்ணாமலை, ஜூலை 2:
திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வருகை தந்த அமைச்சர் சரத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதையுடன் வரவேற்று, பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் அருள்மிகு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசித்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது தவெக தெற்கு மாவட்ட செயலாளர் க. பாரதிதாசன், மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.