காரைக்கால், ஜூலை 2:

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), தாவர அடிப்படையிலான (Vegan) உணவுப் பொருட்களை நுகர்வோர் எளிதில் அடையாளம் காணும் வகையில், 2027 ஜூலை 1 முதல் அனைத்து Vegan உணவுப் பொருட்களிலும் அதிகாரப்பூர்வ VEGAN குறியீட்டை கட்டாயமாகப் பயன்படுத்தும் நடைமுறையை அமல்படுத்த உள்ளது.

இந்த புதிய நடைமுறையின்படி, VEGAN குறியீடு இடம்பெறும் உணவுப் பொருட்களில் விலங்கு சார்ந்த எந்த மூலப்பொருட்களும் பயன்படுத்தப்படவில்லை என்பதை நுகர்வோர் எளிதில் அறிந்து கொள்ள முடியும். குறிப்பாக பால், முட்டை, தேன் உள்ளிட்ட விலங்கு சார்ந்த பொருட்கள் இல்லாத தயாரிப்புகளுக்கு மட்டுமே இந்த குறியீடு வழங்கப்படும்.

இந்த நடவடிக்கை மூலம் உணவுப் பொருட்களின் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், நுகர்வோர் சரியான தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வை மேற்கொள்ளவும் வழிவகுக்கும். மேலும், தாவர அடிப்படையிலான உணவுகளை விரும்புவோர் மற்றும் Vegan வாழ்க்கை முறையைப் பின்பற்றுவோருக்கு இது பெரும் பயனளிக்கும்.

இதுகுறித்து FEDCOT INDIA – நுகர்வோர் சங்கங்கள் கூட்டமைப்பு, புதுச்சேரி மாநிலம், காரைக்கால் சார்பில் பொதுமக்கள், உணவுப் பொருட்களை வாங்கும் முன் அவற்றின் லேபிள்களை கவனமாகப் படித்து, FSSAI அங்கீகாரம் மற்றும் அதிகாரப்பூர்வ VEGAN குறியீடு இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி வாங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வெளியீட்டாளர்:

  • எஸ். திருமுருகன், வழக்கறிஞர், மாநிலத் தலைவர், FEDCOT INDIA – புதுச்சேரி மாநிலம்.
  • எஸ். சிவகுமார், BIS Trainer, இந்திய அரசு, Eat Right India உறுப்பினர், FEDCOT INDIA – Consumer Movement, தேசிய இணைச் செயலாளர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *