சென்னை, பழவந்தாங்கல் பகுதியில் அமைந்துள்ள அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் எம். அனந்த நாராயணன் மற்றும் துணை முதல்வர் முனைவர் ஆர். இளங்கோவன் ஆகியோர் புதிய மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்தினர்.
அப்போது பேசிய அவர்கள், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததுடன், ஒழுக்கம், நேர்மை, விடாமுயற்சி ஆகியவற்றை கடைப்பிடித்து உயர்ந்த இலக்குகளை நோக்கி பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும், ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை முழு கவனத்துடன் கற்று கல்வியில் முன்னேற வேண்டும் என்றும், உடல்நலத்தைப் பேணிக் காப்பதுடன், தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, அனைவருடனும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் கல்லூரி முதல்வர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர். முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.