திருவாரூர்., ஜூன் 02
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் சுழற்சி முறையில் ஆட்டோக்கள் இயக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் திருவாரூரில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திருவாரூர் பழையபேருந்து நிலையம் எதிரில் சிஐடியு இந்திய தொழிற்சங்க மையம் சார்பில்
ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க சுழற்சி முறையில் ஆட்டோ இயக்குவதை தடுத்து நிறுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக கடந்த 2019 ஆம் ஆண்டு கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டதை அமல்படுத்த வேண்டும்.
புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் சுழற்சி முறையில் இயக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் . தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் சுகுமாறன் , துணைத்தலைவர் ஜெயபால் ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் மாநில செயலாளர் சிவாஜி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் அனிபா மற்றும் திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள், திருவாரூர் ஆட்டோ ஓட்டுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.