மன்னார்குடி., ஜூலை 02

தவெக அரசின் விவசாயிகள் தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்கள் முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்திருந்தது.

இந்நிலையில் தவெக, ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகள் பெற்ற கடன் தொகைக்கு ஏற்ப தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் தமிழ்நாடு முதலமைச்சர் கண்டித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தமிழக விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் , ஜீன் 12ந்தேதி மேட்டுர் அணை திறக்கபடாததால் குறுவை சாகுபடியை இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஏக்கர் ஒன்றுக்கு 34 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மேகதாது அனை கட்டுவதை டுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர் இந்த சாலை மறியல் போராட்டத்தினால் மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி , வேதாரண்யம் , வேளாங்கண்ணி செல்லும் முக்கிய சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து விவசாயிகளையும் போலிசார் கைது செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *