தாராபுரம்.

ஏபிடி நிறுவனம் இக்குழுமத்தின் நிறுவனர், பன்முக திறனாளர், பத்மபூஷன், அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கம் துவக்கப்பட்டு பல்வேறு விருட்சங்களாக, விழுதுகளாக தழைத்தோங்கி வளர்ந்து வருகிறது அதன் தொடர்ச்சியாக . நிறுவனங்களை வணிகரீதியாக மட்டுமின்றி, விவசாயிகளின் வாழ்க்கை தர மேம்பாடு, சமூக, சமுதாய மேம்பாடு கல்வி வளர்ச்சி போன்றவற்றிலும் தமது சிந்தனையாற்றல் மூலம் எதிர்கால இந்தியாவைப்பற்றியும், இளைஞர்களை கல்வி பயிலும் பொழுதே தொழில் முனைவோராக மாற்றிட வழிவகுத்தவர். அவரது கால்தடங்களை தவறாது, பிறழாது பின்பற்றி அவரது முயற்சி, சிந்தனைகளின், கனவுகளின் நீட்சியாக .ம.பாலசுப்பிரமணியம் முன்னெடுக்கப்பட்டு துவக்க விழா ஏபிடி சொசைட்டி ஆகும்.

சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் விவசாயத்தின் மீது நாட்டம் வெகுவாக குறைந்துவருகின்றது. கிராமப்புற கூலி ஆட்கள் நகர்புற கட்டுமானப் பணிகளுக்கும், ஜவுளி தொழில்களுக்கும் நகர்ந்து வருவதால் விவசாயத்திற்கு தேவையான கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்படுவதாலும், மாறி வருகின்ற பருவநிலை மாற்றங்களாலும், விளைவிக்கின்ற விலைப்பொருட்களுக்கு போதிய விலை கிட்டாததாலும், கிராமப்புற விவசாயிகள் விவசாயத்தை விட்டு மாற்று வருமானங்களை நோக்கி நகரக்கூடிய சூழ்நிலை உருவாகி வருகின்றது. இத்தகையச் சூழலில், தனிப்பட்ட ஒரு பயிர் மூலம் அல்லது தனிப்பட்ட விவசாயம் சார்ந்த ஒரு தொழில் மூலமாகவும் ஈட்டுகின்ற வருமானம் போதுமானதாக இல்லை என்பதை உணர்ந்து, ஏபிடி சொசைட்டி நவீன விஞ்ஞான முறைகளை பின்பற்றி பயிர்களின் மகசூலை உயர்த்துவதோடு “ஒருங்கிணைந்த பண்ணைய முறை” என்பதை கருத்திற்கொண்டு இந்த ஏபிடி சொசைட்டி துவங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் வருவாய் ஈட்டும் வகையில் காய்கறி பயிர், கால்நடை மூலம் அதிக பால் உற்பத்தி, கோழி, ஆடு, மீன், காளான், தேனி வளர்ப்பு போன்றவற்றின் மூலமும், ஓராண்டு பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்றவற்றையும், அதிக நிலப்பரப்புடையவராக இருப்பின் பழ வகை பயிர்களையும், நவீன விஞ்ஞான உத்திகளை, விவசாயிகளுக்கு போதுமான பயிற்சிகள், மாதிரி வயல் அமைத்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்திடவும், வருவாயை மேம்படுத்திடவும். ஏபிடி சொசைட்டியின் சேவை மையம் துவக்கப்படுகிறது.

மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் உபகரணங்கள் தரமானதாக வழங்கிட ஏபிடி சேவை மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டுமின்றி கிராமப்புற குழந்தைகளுக்கு கல்வி வழங்கிட ஒற்றை ஆசிரியர் வகுப்பறைகளும், கிராமப்புற பெண்களின் நலனுக்காக அவர்களை இளம் தொழில் முனைவோராக மாற்றிட அனைத்து வாய்ப்புகளையும், சூழல்களையும் ஏற்படுத்திட ஏபிடி சேவை மையம் முனைந்துள்ளது.

மேற்கண்ட உன்னதமான திட்டங்களையும், எதிர்கால விவசாயத்தை லாபகரமாக மாற்றிடவும், விவசாயிகள் விவசாயத்தில் நிலைத்து நீடித்திடும் வகையிலும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வதற்கு முன்பாக அதற்கெல்லாம் ஆதாரமாக, சாட்சியமாக நிரூபணம் செய்யும் வகையில் “ஏபிடி சொசைட்டி” மற்றும் “ஏபிடி சேவை மையம்” சந்திராபுரம்

கிராமத்தோடு கொண்டுள்ள நீண்ட, நெடிய உறவுகளை கருத்திற்கொண்டு இக்கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி அமைத்திட மேற்கொண்ட முயற்சியின் துவக்கப்புள்ளிதான் இந்நிகழ்வின் துவக்க விழா.

இந்த விழாவை சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர்.ம. பாலசுப்ரமணியம் அவர்கள் தலைமை ஏற்று பெருமகிழ்வுடன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில். வினோதினி பாலசுப்பிரமணியம், சம்யுக்தா சங்கர் வாணவராயர், செல்வி.சுருதி,.அம்ரித் விஷ்ணு, மற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், சந்திராபுரம் ஏபிடி சேவை மையத்தின் அலுவலர்களும், ஊழியர்களும், சந்திராபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் பேசும்பொழுது தங்களது கிராமத்தில் ஏபிடி சொசைட்டியின் வருகை தங்களுக்கு பெருமகிழ்ச்சியையும், பலன் உள்ளதாக அமையும் என்பதாலும் தங்களது ஆதரவையும், ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்தனர். விவசாயிகள் அதிகமாக ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் சந்திராபுரம் கிராமம் வளர்ச்சி அடைய என்றும் இந்த நிறுவனம் உங்களுடன் இருக்கும் என்று கூறினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *