பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி மாணவிகளுக்கு சீருடை வழங்கப்பட்டது…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஐயப்பன் ஆலய அறக்கட்டளை சார்பில் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கல்யாணி வரவேற்று பேசினார்.
விழாவில் அறக்கட்டளை தலைவர் தலைமை வகித்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் 36 மாணவிகளுக்கு சீருடை வழங்கினார்.
விழாவில் துணைத் தலைவர் சுகன்யா, செயலாளர் சரண், உறுப்பினர்கள் சூர்யா, செந்தில், விஜேஷ், ஹனிபா, ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.