இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 ஆம் கல்வியாண்டு இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது…
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 ஆம் ஆண்டுக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெற்றது.
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் டி.ஆர்.கே சரஸ்வதி மற்றும் நிர்வாக செயலர் டாக்டர் கே.பிரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,
முதல் நிகழ்வாக கல்லூரியின் செயலாளர் ,நிர்வாக செயலாளர்,முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பொன்னுசாமி கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கல்லூரியின் செயலர் சரஸ்வதி பேசுகையில், பெற்றோர்களுக்கு மாணவர்களின் மீதான அச்சம் வேண்டாம் என்றும்,கல்லூரியின் செயலர் என்கின்ற முறையில் தாயாக இருந்து சிறந்த மாணவர்களை உருவாக்க கல்லூரி நிர்வாகம் உறுதி அளிப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்..
விழாவில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் சிந்தனை கவிஞருமான கவிதாசன் கலந்து கொண்டு மாணவர்களிடையே பேசினார்..
மாணவர்களிடையே கல்வியினுடைய முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களுடைய கவனம் முற்றிலுமாக படிப்பின் மீது இருத்தல் அவசியம் என்பதை வலியுறுத்தி பேசிய அவர், முயற்சி என்பதை மாணவர்கள் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் என தெரிவித்தார்..
விழாவில் கவுரவ விருந்தினர்களாக,எம்.எஸ்.எம்.இ.பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார்,வொரண்டா எண்டர்பிரசைஸ் நிறுவனத்தின் பேச்சாளர் வித்யா ஸ்ரீகாந்த் ஆகியோர் பேசுகையில்,மாணவர்கள் கல்வியோடு பன்முக திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டுமென தெரிவித்தனர்..
விழாவின் இறுதியாக ஆங்கிலத்துறைத் தலைவர் பிரியா தாமஸ் நன்றி கூறினார்.
இவ்விழாவில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள், பெற்றோர்கள்,கல்லூரி துறை தலைவர்கள்,பேராசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.