அந்தியூர் பகுதியில் இயங்கி வரும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.பர்கூர் ரோட்டில் தண்ணீர்பந்தலில் செயல்படும் முருகன் பேக்கரியில் ஆய்வு செய்தபோது, உணவுப் பொருட்களை பொட்டலம் செய்ய செய்தித்தாள் பயன்படுத்தியதும், ஃபாஸ்ட் புட் தயாரிப்பில் அனுமதியற்ற கலர் பவுடர் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது.விதிமுறையை முருகன் பேக்கரிக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, விளக்கம் கேட்டு இக்கடைக்கு நோட்டீஸ் வழங்கினர்.
மேலும், அந்தியூர் சுற்று வட்டாரத்தில், இந்த பேக்கரில் மட்டும்தான், 5 ரூபாய் அதிகரித்து, அஸ்கா டீ 20 ரூபாய்க்கும், நாட்டு சர்க்கரை டீ 25க்கும், லெமன் டீ 25க்கும், பூஸ்ட் மற்றும் ஹார்லிக்ஸ் ஆகியவை 30க்கும் விற்பனை செய்யப்படுகிறது என வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.