வடலூர், ஜூலை. 3 –
பண்ருட்டி அருகே உள்ள மேட்டுக்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி2025-2026 ம் ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வில் 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவியார்களுக்கும் நூறு தேர்ச்சி பெறகாரணமான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கும் விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா மனித உரிமை செல் அமைப்பின் மாநில பொது செயலாளர் கண்ணன்,தலைமையில்,மாநில தலைவர் ராமலிங்கம், மேட்டுக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது,
நிகழ்ச்சியில் மாநில சிறப்பு தலைவர் டி ஆர் எம். சாந்தி ஃபர்னிச்சர் ஷோரூம் நிறுவனர் டி.ராஜமாரியப்பன் கலந்துகொண்டு,ஆசிரியர்கள் மாணவர் மாணவிகளுக்கு பொன்னாடை போர்த்தி பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார், நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தமிழ்செல்வி, ரேணுகா, சண்முகப்ரியா, மஹாலக்ஷ்மி, மணிமொழி,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், பெற்றோர்கள்
கலந்து கொண்டனர் நிரைவாக தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்