அந்தியூர், ஜூலை 2: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் முன்பு, பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் பாப்பிலா ஜாஸ்மின் கலந்துகொண்டு, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள், அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு தொடர்பான சட்ட நுணுக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, அந்தியூர் பேருந்து நிலையம், கார் நிறுத்தம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் டிராபிக் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.