திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் பழங்குடி இன மாணவர்களுக்கு சத்துணவு உட்கொள்ள தட்டு மற்றும் கற்றல் பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா, ஓய்வுபெற்ற அஞ்சல் துறை அலுவலர் தன்யகுமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், உதவிஆசிரியை சாந்தி, சமூக ஆர்வலர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.