பெரியகுளம் அருகே வடுகபட்டி தென்கரை பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி தென்கரை பேரூராட்சிகளில் பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் வடுகப்பட்டி பேரூராட்சி பகுதியில் ரூபாய் 1 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் எரிவாயு தகனம் மையக் மேடை கட்டடத்தைப் பார்வையிட்டதுடன் கட்டுமானப் பணிகளின் தரத் தன்மை குறித்து ஆய்வு செய்து பணிகளை உரிய காலத்திற்கு முடித்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாசப்பட்டி பகுதியில் ரூபாய் 60 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமுதாய கூட கட்டுமான பணிகளை பார்வையிட்டு அதன் தரத் தன்மை குறித்து ஆய்வு செய்ததுடன் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்திட இது தொடர்புடைய தன் துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்
இந்த ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் உதவி செயற்பொறியாளர் அம்சா செயல் அலுவலர்கள் வடுகபட்டி கல்பனா தேவி தென்கரை சின்னசாமி பாண்டியன் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தென்கரை வே. நாகராஜ் வடுகபட்டி சி. நடேசன் உதவிப் பொறியாளர் ராஜன் இளநிலை உதவியாளர்கள் எம் .முருகன் முத்துகிருஷ்ணன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்