செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

இந்த நிகழ்விற்கு பள்ளியின் போதை பொருள் எதிர்ப்பு மன்ற உறுப்பினர் விக்னேஷ் வரவேற்புரை வழங்கினார் பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை வகித்து போதை சொல்லும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளர்களாக காவேரிப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் சங்கர் ஜெய்சங்கர் ரகுபதி மற்றும் காவலர் மகாலிங்கம் ஆகியோர் பங்கேற்று போதைப் பொருளினால் உண்டாகும் கொடிய விளைவுகள் குறித்தும் அதனால் சமூக மதிப்பிழக்கும் நிலை ஏற்படும் என்பது குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர்

மேலும் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் சார்ந்த விநியோகங்கள் ஏதேனும் இருப்பின் உடனடியாக 10 581 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அல்லது காவல் உதவி எண் 100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து போதையில்லா தமிழ்நாடு என்று இலக்கை அடைய மாணவர்கள் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகவேல் கலந்து கொண்டு போதை இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை அடைய அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்

இதில் ஆசிரியர்கள் கமல் வேத லட்சுமி உமாசங்கர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முடிவில் பள்ளியின் தமிழாசிரியர் தனசேகர் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *