அரியலூரில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் அன்பகம் சிறப்பு பள்ளி திறப்பு விழா நேற்று சிறப்பாக நடை பெற்றது.கடந்த 7 ஆண்டு களாக அரியலூர் சிங்காரத் தெருவில் ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் சிறப்பாக செயல்பட்டு வந்த அன்பகம் சிறப்பு பள்ளி, சிறப்பு குழந்தை களின் தேவைகளை கருத்தில் கொண்டு ஆசைதம்பி தெரு வில் இடவசதியுடன் கூடிய புதிய கட்டிடத்திற்கு மாற்றப் பட்டது. புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட அன்பகம் சிறப்பு பள்ளியின் திறப்புவிழாவிற்கு ரீடு தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் முனைவர் லயன் ரீடு ஆர். செல்வம் தலைமை தாங்கி னார்.
திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் அன்பகம் சிறப்பு பள்ளி ஒருங்கிணைப்பாளர் லயன் எம். ஷகிலா பீவி வரவேற்றார். திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் த. ஜானகிராமன் கலந்து கொண்டு புதிய பள்ளி வளாகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி பார்வை யிட்டார்.தொடர்ந்து, விழாவில் ஏபிஎன் டெக்ஸ்டைல் & ரெடிமேட்ஸ் மற்றும் ஏபிஎன் நிறுவனக் குழுமத் தலைவர் ஏ.பி.என். சுதாகரன், ஆர்டிசி குழுமத்தின் அனிஷ் அதிய பானு, தனிஷா குழுமத்தின் ஹாஜிரா கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து விழாவில் ரீடு தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் முனைவர் ரீடு ஆர் .செல்வம் பேசுகையில்,இப்பள்ளியில் அறிவுசார் குறைபாடுடைய குழந்தை களுக்கான உண்டு, உறைவிட வசதியுடன் , பிசியோதெரபி, பேச்சுப் பயிற்சி, தொழிற்சார் பயிற்சி, சிறப்புக் கல்வி, யோகா மற்றும் விளையாட்டுப் பயிற்சி உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ரீடு தொண்டு நிறுவன உறுப்பினர் த. கணேசன், சிறப்பு ஆசிரியர்கள், நிறுவனப் பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் நிர்வாகத் தலைவர் அமலோற்பவமேரி நன்றி கூறினார்.