கோயம்புத்தூர், இந்தியா, ஜூலை 8, 2026:

ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் குளோபல் கேபபிலிட்டி சென்டரான ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் இந்தியா, இன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் ஒரு புதிய ஆபீஸைத் திறந்து வைத்துள்ளது.

கோவையில் எஸ்விபி டெக் பார்க்கில் அமைந்துள்ள இந்த மையம், சென்னையில் உள்ள குளோபல் டெக்னாலஜி அண்ட் பிசினஸ் சென்டர் மற்றும் பெங்களூரில் உள்ள டெக்னாலஜி இன்குபேஷன் சென்டரைத் தொடர்ந்து, இந்தியாவில் எஃப்பிபிஎஸ் இந்தியாவின் மூன்றாவது தளமாகும். ஃபோர்டின் குளோபல் பிசினஸ் ஆபரேஷன்ஸின் செயல்திறனையும் தொடர்ச்சியையும் வலுப்படுத்துவதற்கான ஒரு பிரத்யேக மையமாக இந்த புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் முதன்மையாக அக்கவுண்டிங், ஃபோர்டு கிரெடிட் மற்றும் பிசினஸ் ஆபரேஷன்ஸ் ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் குழு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். இக்குழுக்கள் ஃபோர்டின் குளோபல் மார்க்கெட்ஸுக்கு சேவையாற்றுகின்றன. மேலும், மிக முக்கியமான பணிகள் எந்தவொரு தடையும் இன்றி இயங்குவதை உறுதி செய்வதன் மூலம், இந்த கோயம்புத்தூர் தளம் எஃப்பிபிஎஸ் இந்தியாவின் பிசினஸ் கண்டினியூட்டி ஸ்ட்ராட்டஜியில் முக்கிய மையமாக விளங்குகிறது.

இந்த கோயம்புத்தூர் ஃபெசிலிட்டி எஸ்விபி டெக் பார்க்கின் மூன்று தளங்களை உள்ளடக்கியது. சுமார் 800 குழு உறுப்பினர்கள் அமரக்கூடிய வசதியுடன் 82,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த வொர்க்ஸ்பேஸ் கொலாபரேட்டிவ் மற்றும் ஹைபிரிட் வொர்க்கிங் முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு தளத்திலும் 230-க்கும் மேற்பட்ட வொர்க்ஸ்டேஷன்ஸ், மீட்டிங் ரூம்ஸ், போர்ட்ரூம்ஸ், தடையற்ற வேலைக்கான ஃபோகஸ் ரூம்ஸ், முறைசாரா உரையாடல்களுக்கான பூத் சீட்ஸ் மற்றும் பேன்ட்ரீஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இந்தியா சைட் ஹெட் மற்றும் மேனேஜிங் டைரக்டர் கங்காப்ரியா சக்ரவர்த்தி கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளில், ஃபோர்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குளோபல் பிராசஸ்களை முழுமையாக நிர்வகிக்கும் திறனை எஃப்பிபிஎஸ் இந்தியா உருவாக்கியுள்ளது. இந்த நகரத்தைச் சேர்ந்த டீம் மெம்பர்ஸ் ஏற்கனவே எங்களுடன் பணியாற்றி வருகின்றனர். கோயம்புத்தூர் ஒரு துடிப்பான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பிசினஸ் ஹப் ஆக உருவெடுத்துள்ளது. எனவே, இங்கு எங்களது இருப்பை விரிவுபடுத்த விரும்பினோம்,” என்றார்.

கோயம்புத்தூரில் புதிய ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் மையத்தைத் திறந்து வைத்து பேசிய தமிழ்நாடு அரசின் தொழில்துறை, முதலீட்டு மேம்பாடு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, “கோயம்புத்தூரில் இந்த மையத்தைத் தொடங்க ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் எடுத்துள்ள முடிவு, குளோபல் கேபபிலிட்டி மற்றும் அறிவுசார் தொழில்களுக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு திகழ்வதை உறுதிப்படுத்துகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுடன் இணைந்து செயல்பட்டு வரும் ஃபோர்டு பிசினஸ் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இந்த விரிவாக்கம், அந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாகும்,” என்றார்.

இந்தியாவின் ஜிசிசி எகோசிஸ்டம் ஒரு டெலிவரி பேஸ் என்பதைத் தாண்டி, உலகளாவிய நிறுவனங்களின் முக்கிய ஸ்ட்ராடஜிக் ஓனர்ஷிப் மையமாக வளர்ந்து வரும் நிலையில், கோயம்புத்தூர் மையம் அந்த வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கிறது. இந்தியாவில் இருந்து ஃபோர்டின் டெக்னாலஜி மற்றும் பிசினஸ் டிரான்ஸ்ஃபர்மேஷனை முன்னெடுத்து வரும் எஃப்பிபிஎஸ் இந்தியா, நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் டெக்-டிரிவன் சொல்யூஷன்ஸ் மற்றும் சர்வீசஸை வழங்கி வருகிறது. ஃபோர்டின் உலகளாவிய வணிகச் செயல்பாடுகள் வலுவாகவும், நம்பகமானதாகவும் தொடர்வதை உறுதி செய்வதில், கோயம்புத்தூர் மையம் முக்கிய பங்காற்றும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *