புதுச்சேரி கிராம மற்றும் நகர்ப்புற கல்வி மேம்பாட்டு நிறுவனம் கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.
குறிப்பாக, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மழலையர் பள்ளி ஆசிரியர் பயிற்சிகள், சுற்றுலா மற்றும் விமானத் துறை சார்ந்த பயிற்சிகளை வழங்குவதில் இந்நிறுவனம் முன்னோடியாக உள்ளது.
நிறுவனத்தின் 21வது ஆண்டு விழா, 15.11.2025 புதுவை தமிழ்ச் சங்கத்தில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினர்களாக காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தின் மனையியல் துறைத் தலைவர் முனைவர் அலமேலு மங்கை அவர்களும், புதுவை முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் ராஜகோபால் சுவாமி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.
அவர்கள், பயிற்சி நிறைவு செய்த மாணவ-மாணவியர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி வாழ்த்தியதுடன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்குப் பரிசுகளையும் அளித்து கெளரவித்தனர்.
விழாவின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் மாணவ-மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவர்களின் சிறப்பான நடனங்கள், நாடகங்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
நிறுவனத்தின் செயலாளர் முனைவர் திருமதி. விஜயலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிறுவனர் திரு. ரௌத்திரம் சக்திவேல் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இந்த மாபெரும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. முகமது அமீன் மற்றும் திரு. நீலகண்டன் ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்…