கரூர், ஜூலை 10: கரூர் மாவட்டம், காக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள என்.எஸ்.என். பொறியியல் கல்லூரி கலையரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், பணிகளின் முன்னேற்ற நிலை மற்றும் அவற்றை விரைந்து நிறைவேற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் விஜயலஷ்மி சின்னசாமி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி. முத்துக்குமரன், இ.ஆ.ப., கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் எம். சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.