கம்பம் நகராட்சி வளாகத்தில் உள்ளஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகராட்சி வளாகத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடு செய்து வரும் ஸ்ரீ நாகலிங்கேஸ்ஈஸ்வரர் திருக்கோவிலுள்ளது
இந்த கோவில் தரையில் இருந்த கோவிலை கழிவுநீர் சூழ்ந்தது, இதையடுத்து கோவிலை உயர்த்தி புனரமைக்க தூய்மை பணியாளர்கள் முடிவு செய்து பணிகளை மேற்கொண்டனர்.
பணிகள் நிறைவடைந்ததை யடுத்து கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன
இந்த விழாவிற்கு நகராட்சி நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் முன்னிலையில் நடைபெற்றது இந்த விழாவில் , முன்னாள் கம்பம் நகர் மன்ற தலைவர்கள் எஸ்.டி.டி.இளங்கோவன் டி.டி. சிவகுமார் ராஜா மணி நகராட்சி பணியாளர்கள் நகர் மன்ற கவுன்சிலர்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
பின்னர் இவ்விழாவில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.