கம்பம் நகராட்சி மேலாளரிடம் நகர்மன்ற கவுன்சிலர் மனு
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி மேலாளர் குமார் அவர்களிடம் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர் கம்பம் சாதிக் மனு ஒன்றை அளித்தார் மனு விவரம் கம்பம் புதுப்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் வடிகால் துறை சார்பில் கம்பம் 11 வது வார்டு பாவலர் படிப்பகம் முதல் முகைதீன் ஆண்டவர் பள்ளி வழியாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலையைத் தோண்டி குடிநீர் குழாய் பதித்து செல்கிறார்கள் அப்படி பதித்து செல்லும்போது கம்பம் 11 ஆவது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்படும் குடிநீர் இணைப்புகள் சேதமடைந்தால் அதனை சரி செய்யவும், சாலை சேதம் அடைந்தால் தற்போது பணி செய்யும் துறையே சீரமைத்து தரவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.