திருவாரூர்., ஜூலை.10

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத் தலைவர் மகேஷ் தலைமையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,

இந்த ஆர்பாட்டத்தில் 17 வது சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பணிகளில் வருவாய்த்துறை ஊழியர்கள் மேற்கொண்ட செலவினங்கள் நிதியினை தேர்தல் முடிந்து 2 மாதங்கள் கடந்தும் இதுவரை வழங்கப்படாத நிலை உள்ளது.

தேர்தல் ஆணையம் தேர்தல் செலவின நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் . வருவாய்த் துறையில் காலியாக உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் .

விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும் , வருவாய்த்துறை அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும் என உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
கண்டன முழக்கம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் கணேஷ் , வட்டத் தலைவர் பால்ராஜ் , தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் , நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *