தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்தது. கிராமங்களில் தரமான மருத்துவ சேவை வழங்கும் திறன் மேம்பாட்டு செவிலியர் பணியிடங்கள் உள்ளிட்ட நிரந்தர செவிலியர் பணி இடங்களையும் மறுபணியாக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் நிரந்தர செவிலியர் காலிப் பணியிடங்களைத் துவக்கி வைத்து எம்.ஆர்.பி., ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட துணைத் தலைவர் பாண்டியம்மாள் தலைமை வகித்தார். மாநில தலைவர் பாண்டி, அரசு ஊழியர் சங்க பொருளாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், நிர்வாகி கள் சின்னப்பொன்னு, மாரி, மாரி யப்பன், வேல்முருகன், ஆறுமு கம், சிவராணி, கல்யாணசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர். பொருளாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *