கம்பம் நகரில் வளர்ச்சி திட்டப் பணிகளை கம்பம் எம்எல்ஏ முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஆய்வு

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

கம்பம் நகராட்சியில் வீரப்ப நாயக்கன்குளம் மற்றும் அந்தப் பகுதியினை சுற்றியுள்ள வரத்து கால்வாய்கள் சீரமைக்காமல் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதால் அதனை சீரமைக்க பொது மக்கள் முன் வைத்த கோரிக்கையையொட்டி அந்த பகுதிக்கு மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் நேரில் சென்று குளத்தை பார்வையிட்டு சீரமைப்பதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டதுடன் வீரப்ப நாயக்கன் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள வரத்து கால்வாய்களை பெரியாறு வைகை வடி நில கோட்டம் மூலம் சீரமைக்க அரசு அலுவலர்களுக்கு வலியுறுத்தினார் இந்த ஆய்வின் போது உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம் உதவி செயற்பொறியாளர் பெரியாறு வைகை வடி நில கோட்டம் மல்லிகா நகராட்சி ஆணையர் உமா சங்கர் தாசில்தார் பால சண்முகம் வட்டார வளர்ச்சி அலுவலர் மைதிலி சுகாதார அலுவலர் மணிகண்டன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *