செங்குன்றம் செய்தியாளர் ஜூலை 12
மாதவரம் ஜி என். டி ரோடு கொல்கத்தா நெடுஞ்சாலை மாதவரம் காவல் நிலைய
குடியிருப்பில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் முதலாவதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி லஷ்மி நவக்கிரக ஹோமங்கள்,ஆசீர்வாத தீப ஆராதணைகள் தொடங்கி இரண்டாம் கால ஹோமம், கோபூஜை, திவ்யாஹீதி ஹோமம், பூர்ணாஹீதி ஆசீர்வாதத்துடன் தீப ஆராதனைகள் சுவாமிக்கு காண்பிக்கபட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீரை கோயில் கோபுர கலசங்களில் ஊற்றி மிகச் சிறப்பாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் காவல் ஆளினர்கள் உதவி ஆளினர்கள் போலீசார், மகளிர் போலீசார்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் புனித நீர் பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டு இறுதியாக அன்னதானம் நடைபெற்றது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு விநாயகரின் அருளை பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாதவரம் காவலர் குடியிருப்போர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.