அலங்காநல்லுார், ஜூலை 13-

மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் ‘போதை இல்லா தமிழகம்’ விழிப்புணர்வு ஊர்வலம் `வீதலீடர்ஸ்’, நேதாஜி மக்கள் இயக்கம் மற்றும் கொடை டிரஸ்ட் சார்பில் நடந்தது. கே.ஜி.பி., குழும தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். மாமதுரை அகில உலகத் தலைவர் திருமுருகன், பிளாஸ்டிக் மறுசுழற்சி சங்கச் செயலாளர் விஜயராகவன், ஓய்வுபெற்ற ஆவின் பொது மேலாளர் தங்கராஜன், விஜயன் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். ஒருங்கி ணைப்பாளர் மகா சுசீந்திரன் வரவேற்றார். எஸ். டி.எம்., ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஸ்ரீதேவி துவக்கி வைத்தார். நேதாஜி மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் இளவரசன், ஆர்வலர்கள் வீரபத்திரன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஊர்வலம் அய்யப்பன் கோவில் முதல் கேட்டுகடை வரை நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர்
வெள்ளையம்பட்டி செந்தில்குமார், நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *