தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த செயல் விளக்கப் பயிற்சி நடந்தது


சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தில் கோவை காருண்யா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி வேளாண்மை பிரிவு மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்த பயிற்சி நடந்தது


பயிற்சிக்கு ஆர்விஎஸ் கிருஷி விஞ்ஞான் கேந்திரா அலுவலர் சுகுமார் மற்றும் வேளாண்மை அலுவலர் வர்ஷினி ஆகியோர் வழிகாட்டினர் விவசாயி கல்யாணி முன்னிலை வகித்தார், காருண்யா பல்கலைக்கழக மாணவிகள் அபிஷா, பபிதா, சுப்ரஜா, அக்ஷிதா, அபிஷா ஹீமதி, மித்திரா, செர்லி, ஜெனிபர், தர்ஷனா, ஜெயஶ்ரீ ஆகியோர் அடங்கிய குழுவினர் விவசாயிகளுக்கு பஞ்சகவ்யா தயாரிப்பு மற்றும் அதன் பயன்பாடு குறித்து செயல்விளக்கப் பயிற்சி மற்றும் பஞ்சகவ்யா தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்கள், தயாரிக்கும் முறை, பயன்படுத்தும் அளவு மற்றும் இயற்கை வேளாண்மையில் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு நேரடி விளக்கமளித்து கலந்துரையாடி விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனர் இதில் சுமார் 100 விவசாயிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *